வாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை
கேள்வி -?
வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கும்
அதை மூட்டு வலிக்கு பயன்படுத்துவார்கள் என்று கேள்வி பட்டு இருகிறேன். அதை எப்படி
பயன் படுத்துவது என்று சொல்லவும் ?
பதில்
-!
வாத நாராயணன் -Delonix elata
இதன்
வேறு பெயர்கள் :-
வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி
இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு
உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல்
தீரும்.
இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும்
வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.
நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.
வாத மடக்கி தைலம் செய்முறை :
1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம் விளக்கெண்ணை - 1-லிட்டர்
3 -சுக்கு - 40 - கிராம்
4 - மிளகு - 40 - கிராம்
5 - திப்பிலி - 40 - கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து
எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில்
மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத்
தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும்
தீரும்.
குறிப்பு :-இதனுடன் மேற்ப் பிரயோக "வாத தைலம்"
சேர்த்து பயன்படுத்தி வந்தால் மிகுந்த பலன் விரைவில் கிட்டும்.
நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு -(face book)