blog title

புதன், 5 செப்டம்பர், 2012

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க : ஆண்களுக்கும் 


உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து
பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும்
தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?
Top of Form

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த
பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்
தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட
நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் : 

1 - முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
    யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
    பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
    மேல் போட்டு வரவும் .

    தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
   புள்ளி மறைந்து விடும்.

2 -
முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க :
    1 - கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன் அளவு 
    2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
    3 - தயிர் - 2 - டீ ஸ்பூன்
    4 - எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன்
   இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
   களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

   இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
   பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
   பெரும்.

3 -
முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :
    அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
    யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
    குழப்பி வைத்துக் கொள்ளவும்.
    இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
    வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

நன்றி !

Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி -பதில் குழு (face book)  
Bottom of Form8 கருத்துகள்:

 1. அன்பு மிக்க திரு ஐயா அவர்களே,
  என்னது தம்பி முகத்தில் கண்னுக்கு கீழ அடிபட்ட (தையல் போடப்பட்ட )தழும்புகள் உள்ளது.தழும்புகள் மறைய தயவு செய்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

  சித்த நேசன்

  பதிலளிநீக்கு
 2. அன்பு மிக்க திரு ஐயா அவர்களே,

  தொட்டாற்சுருங்கி செடிமூலிகை பற்றிக் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

  சித்த நேசன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தொட்டாற் சுருங்கி மூலிகை

   தெய்வீக மூலிகை

   ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது.வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர்.

   இதைப்பற்றிய மேலும் விபரங்கள் அறிய முக நூலில் சென்று வாசியுங்கள்
   "ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் - குழு" இந்த தளத்தில்
   http://www.facebook.com/groups/308159882577638/doc/423987507661541/

   நன்றி...

   நீக்கு
 3. Iya venkushtam itharu maruthu irukkitatha irutal raagou@gmail.com enra mail luku pathil tharaiyaluma.
  Nanri vanakkam

  பதிலளிநீக்கு
 4. ஐயா அக்ணி பருக்களுக்கு (ஸ்ட்ராபெர்ரி போன்று பள்ளங்கள்) தீர்வு உள்ளதா

  பதிலளிநீக்கு
 5. திரு ஐயா அவர்களே
  நான் ஒரு பெண் எனது முகத்தில் கண்னுக்கு கீழ் வெள்லை புள்ளிகள் நிரைந்து கானப்படு கின்ரது இதற்கான மருத்துவம் ஏதாவது உனடோ.

  பதிலளிநீக்கு