blog title

வியாழன், 11 ஜூலை, 2013

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்



அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்

Mg Mgm
//அக்கி என்று சொல்லபடும் இந்த படத்தில் உள்ளவைகள் போன்று எனது முதுகு மற்றும் வயிற்றில் படர்ந்துள்ளது தக்க மருத்துவம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்...//

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். 

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.

மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
நிர்வாகி
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book
http://siththamaruththuvavilakkam.blogspot.in/


Top of Form
                    
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash4/s32x32/275025_100005212479435_1969936646_q.jpg
Karthik Keyan Good information
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash3/s32x32/276087_100000242130122_815410059_q.jpg
Mg Mgm ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி கடைபிடிக்க தொடங்குகின்றேன்
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-prn1/s32x32/157358_100000232890080_1936315913_q.jpg
Samy Gopal தேவையான நேரத்தில் கிடைத்த குறிப்பு !
·                     https://fbcdn-profile-a.akamaihd.net/hprofile-ak-ash3/s32x32/276087_100000242130122_815410059_q.jpg
Mg Mgm நன்றாக குணமாகி தலைக்கு குளித்து விட்டேன் ஆலோசனைக்கு மிக்க நன்றி


மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் 



மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம் 

//Sir udambu kundaga ethavathu tips thanga sir pls my age is 19//


உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.    


சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.


இளைத்தவனுக்கு  எள்ளு,
கொழுத்தவனுக்கு  கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.  


தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம் 
தேற்றான் கொட்டை லேகியம்.


இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.

இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - face book 
http://siththamaruththuvavilakkam.blogspot.in