blog title

வெள்ளி, 7 டிசம்பர், 2012

வாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :

வாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை   





கேள்வி -?
வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கும் அதை மூட்டு வலிக்கு பயன்படுத்துவார்கள் என்று கேள்வி பட்டு இருகிறேன்.  அதை எப்படி பயன் படுத்துவது என்று சொல்லவும் ?

பதில் -!

வாத நாராயணன் -Delonix elata
இதன் வேறு பெயர்கள் :-
வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி

இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு 
உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல் தீரும்.

இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு  குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும் வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.

நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.

வாத மடக்கி தைலம் செய்முறை :

1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம்  விளக்கெண்ணை -     1-லிட்டர் 
3 -சுக்கு    - 40 -  கிராம் 
4 - மிளகு - 40 -  கிராம்
5 - திப்பிலி -  40 -  கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம் 

மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை  வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.

இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.

இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.

குறிப்பு :-இதனுடன் மேற்ப் பிரயோக "வாத தைலம்" சேர்த்து பயன்படுத்தி வந்தால் மிகுந்த பலன் விரைவில் கிட்டும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு -(face book)