blog title

வெள்ளி, 7 டிசம்பர், 2012

வாத நாராயணன் -Delonix elata -வாத மடக்கி தைலம் செய்முறை :

வாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை   





கேள்வி -?
வாதமடக்கி இலை என்பது எப்படி இருக்கும் அதை மூட்டு வலிக்கு பயன்படுத்துவார்கள் என்று கேள்வி பட்டு இருகிறேன்.  அதை எப்படி பயன் படுத்துவது என்று சொல்லவும் ?

பதில் -!

வாத நாராயணன் -Delonix elata
இதன் வேறு பெயர்கள் :-
வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி

இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு 
உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல் தீரும்.

இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு  குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும் வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.

நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.

வாத மடக்கி தைலம் செய்முறை :

1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம்  விளக்கெண்ணை -     1-லிட்டர் 
3 -சுக்கு    - 40 -  கிராம் 
4 - மிளகு - 40 -  கிராம்
5 - திப்பிலி -  40 -  கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம் 

மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை  வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.

இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.

இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.

குறிப்பு :-இதனுடன் மேற்ப் பிரயோக "வாத தைலம்" சேர்த்து பயன்படுத்தி வந்தால் மிகுந்த பலன் விரைவில் கிட்டும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு -(face book)    



வியாழன், 18 அக்டோபர், 2012

அருகம்புல் காபி - சித்த மருத்துவ முறை

அருகம்புல் காபி 





அருகம்புல் காபி 

இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் 
காபி அல்லது டீ அருந்தினால்தான் உடலில் புத்துணர்வும் 
சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி 
விட்டோம்.இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.

காபி -டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என 
அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் 
உள்ளவர்களுக்கும்,உடலை ஆரோக்கியமாக வைத்துக் 
கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் 
ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை :

தேவையான மூலிகை  பொருட்கள் :

1 - ஏலரிசி            - 25-கிராம்  
2 - வால்மிளகு    - 50 கிராம் 
3 - சீரகம்              - 100-கிராம் 
4 - மிளகு              - 200 -கிராம் 

இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே 
இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து 
கொள்ளவும்.இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி 
ஆகும்.

நீண்ட கொடி அருகம்புல்லை வேர்,தழை இல்லாமல் தண்டுப் 
பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக 
அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு  500- மிலி நீர் விட்டு அடுப்பில்
வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2-டீஸ்பூன் 
போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி  அளவில் 
வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய 
பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு 
வரலாம்.

காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக 
இருக்கும்.இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் 
பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் 
சுத்தமாகும்.நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட 
விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது.நரம்புத்தளர்ச்சி 
நீங்கும்,அதிக பித்தம்,பித்த மயக்கம்,நெஞ்செரிச்சல் நீங்கும்.
குடல் சுத்தமாகும்,மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகு 
கின்றது.

உடலின் உட்சூடு மறையும்,பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் 
சீராகும்,வெள்ளைப்படுதல்,அடி வயிறு கனத்தல்,தொடை நரம்பு 
இழுத்தல் யாவும் குணமாகும்.

குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள்,கணை,
மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்)ஏற்படாது.பசி நன்கு எடுக்கும் 
சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்.

(இம்முறை ஏராளமானோர் செய்து பயனடைந்து வரும் முறை )

நன்றி !

Dr .அரவிந் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி பதில் குழு - facebook         


          




வியாழன், 11 அக்டோபர், 2012

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 






ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.

   செய்முறை :
 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் 
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல் 
தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் 
காப்பாற்றும்.

நன்றி...!

Dr.அரவின் தீபன்...

aravindeepan@gmail.com
siddha maruththuvam kelvi pathil kulu-facebook
Siththamaruththuvavilakkam.blogspot.in
   











வியாழன், 4 அக்டோபர், 2012

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து





சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

கேள்வி.?
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்
ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 
மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...?

நிச்சயம் உண்டு !
சித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்
கூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்
முறைகளை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
தை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள்
மட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம்
உங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .

"சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து"

1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்
2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்
மேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில்
தண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .

தொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில்
நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள்
சமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று
உடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம்
பெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்
உடலில் வராமல் தடுக்கும்.

இது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்...


வியாழன், 6 செப்டம்பர், 2012

சிறியா நங்கை - மருத்துவ பயன்கள்

சிறியா நங்கை - மருத்துவ பயன்கள் 





சிறிய நங்கை பெரிய நங்கை இலைகள் எப்படி இருக்கும்? நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து என்று படித்துள்ளேன். அதை எப்படி பயன்படுத்துவது?
Top of Form

Bottom of Form
Top of Form
சிறியா நங்கையின் மருத்துவ பயன்கள் :
Bottom of Form
Top of Form

Bottom of Form
Top of Form
சிறியாநங் கைத்தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி
                                            மூலிகை குணபாடம் 
இதன் இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும்,இவர்களைப் பெண்கள் இச்சை கொள்வர்.

இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை,மாலை இரு வேளையும் 2 -முதல் 4 - கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும் ,அழகு பெரும்.

பாம்பு கடிக்கு இதன் இலையை க் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும் .

வெண்காரத்தை இதன் இலைச் சாற்றில் அரைத்து புடமிட நீறும் .(பற்பமாகும்) 

சர்க்கரை நோய்க்கு அனுபவ முறை :

சிரியா நங்கை இலைப் பொடி - நெல்லி முள்ளிப் பொடி - நாவல்கொட்டைப் பொடி - வெந்தயப் பொடி - சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை காலை - மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.

நன்றி !

Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி - பதில் குழு (face book)
aravindeepan@gmail.com 

Bottom of Form

புதன், 5 செப்டம்பர், 2012

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்

முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க : ஆண்களுக்கும் 






உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து
பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும்
தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?
Top of Form

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த
பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்
தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட
நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் : 

1 - முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
    யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
    பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
    மேல் போட்டு வரவும் .

    தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
   புள்ளி மறைந்து விடும்.

2 -
முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க :
    1 - கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன் அளவு 
    2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
    3 - தயிர் - 2 - டீ ஸ்பூன்
    4 - எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன்
   இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
   களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

   இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
   பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
   பெரும்.

3 -
முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :
    அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
    யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
    குழப்பி வைத்துக் கொள்ளவும்.
    இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
    வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

நன்றி !

Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவம் கேள்வி -பதில் குழு (face book)  
Bottom of Form



சனி, 1 செப்டம்பர், 2012

மெலிந்த உடல் பருக்க - தந்த ரோகம் - பல்பொடி -

மெலிந்த உடல் பருக்க -



தந்த ரோகம் - பல்பொடி -


மெலிந்த உடல் பருக்க -

இளைத்தவனுக்கு எள்ளு - கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.

மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது . 

 தந்த ரோகம் - பல்பொடி -

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 - சுக்கு 
2 - காசுக்கட்டி 
3 - கடுக்காய் 
4 - இந்துப்பு 

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.

நன்றி !
Dr.அரவின் தீபன்...
சித்த மருத்துவ கேள்வி பதில் -குழு (facebook)  






வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க







முக அழகு - சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது 
உடல் நிலை,மற்றும் மனதின் நிலைகளை முகத் 
தினைக் கண்டே அறியலாம். மேலும் உடலின் 
அழகினையும் முகத்திலேயே காணலாம்.

இன்றைய  நாகரீகஉலகில் தன்னை அழகு படுத்திக் 
கொள்ள அனைவரும் விரும்புகின்றனர் குறிப்பாக
முகம் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகின்
றனர்.இதற்காக ஏராளமான சோப் வகைகள்,கிரீம் 
வகைகள் கடைகளில் கிடைக்கின்றன. மேலும் 
பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஏராளமான பணம் 
செலவு   செய்கின்றனர்.

இதற்கு வீட்டிலிருந்தபடியே சுலபமாகவும்,செலவி
ல்லாமலும்,பக்கவிளைவுகள் இல்லாமலும் செய்து 
கொள்ளக்கூடிய   சித்த மருத்துவ முறையில் ஒரு
முக அழகுக் கலவை.

முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :  

தேவையான பொருட்கள்:-செய்முறை :

1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம் 
2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம் 
3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம் 
4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம் 
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம், 

இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்
கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்
கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு
எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை 
நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும்
கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து 
அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி 
விடவும் .

இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர 
முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும் 
முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்
களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு 
அழகு கிடைக்கும்.
இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.

முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :

1 -- கருவேப்பிலை - ஒரு கை பிடி 
2 - கசகசா - ஒரு டீ ஸ்பூன் 
3 - கஸ்தூரி மஞ்சள்  - சிறிய துண்டு 
இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் 
கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.

நன்றி !
அரவின் தீபன்...     

   




திங்கள், 27 ஆகஸ்ட், 2012

இஞ்சி - சுக்கு - கடுக்காய் - உண்ணும் முறை

இஞ்சி - சுக்கு - கடுக்காய் -உண்ணும் முறை 





கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசி குலாவி 
நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர்.ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில்  உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு,காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர்.அவை வாதம், பித்தம்,கபம் எனப்படும்.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு-
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் -  காற்று -     1,மாத்திரை அளவு - -------- சுக்கு 
பித்தம் - நெருப்பு -  1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி 
கபம் -       நீர் -             1/4-மாத்திரை  அளவு -------- கடுக்காய் 

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை  நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும். 

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு எனவே  நீக்கிவிடவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும். 

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும். 

பழமொழி : 
கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

நன்றி !

அரவின் தீபன்...

சித்த மருத்துவம் கேள்வி பதில்  குழு -(face book)